ADDED : ஆக 03, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முரளி, 27. இவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை காதலித்தார். இது, மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர்கள் கண்டித்தனர். மேலும், அந்த பகுதியில் இருந்து, வேறொரு இடத்துக்கு வாடகை வீட்டிற்கு சென்றனர்.
ஜூன் 10-ல் மாணவியை தனியாக சந்தித்த முரளி, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோர் புகாரில், வேலுார் மகளிர் போலீசார், முரளி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.