/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பைக்கிலிருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் லாரி மோதி பலி
/
பைக்கிலிருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் லாரி மோதி பலி
பைக்கிலிருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் லாரி மோதி பலி
பைக்கிலிருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் லாரி மோதி பலி
ADDED : பிப் 07, 2025 01:23 AM
பள்ளிகொண்டா:வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த இறைவன் காட்டைச் சேர்ந்தவர் ஜீவா, 22. பள்ளிகொண்டாவைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 19. ஊசூர் அடுத்த தெள்ளூரைச் சேர்ந்தவர் சூர்யா, 20. நண்பர்களான மூவரும் ஐ.டி.ஐ., முடித்துவிட்டு, ராணிப்பேட்டையிலுள்ள பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.
நேற்று காலை 8:00 மணிக்கு, மூவரும் 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில், ராணிப்பேட்டை நோக்கி பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். பைக்கை ஜீவா ஓட்டினார்.
பெருமுகை அருகே சாலை விரிவாக்கப்பணி நடப்பதால், ஒருபக்க சாலையில் மட்டும், வாகனம் சென்றுவர அனுமதிக்கப்பட்டது. இவர்கள் சென்ற பைக், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, சாலை நடுவே வைத்திருந்த கூம்பு வடிவ பிளாஸ்டிக் தடுப்பான் மீது மோதியதில், மூவரும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர்.
அப்போது, பின்னால் வந்த லாரி, அவர்கள் மீது மோதியதில், ஜீவா, ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சூர்யா லேசான காயங்களுடன் தப்பினார். சத்துவாச்சாரி போலீசார் விசாரிக்கின்றனர்.