/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வனத்தில் 1.50 டன் மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது
/
வனத்தில் 1.50 டன் மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது
வனத்தில் 1.50 டன் மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது
வனத்தில் 1.50 டன் மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது
ADDED : ஏப் 29, 2025 07:17 AM
ஒடுகத்துார் : வனப்பகுதியில் 1.5 டன் மூங்கில் மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற மூவர் கைதாகினர்.
வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர், நேற்று முன்தினம் இரவு, மேலரசம்பட்டு கருத்தமலை காப்புக்காட்டில் ரோந்தில் ஈடுபட்டபோது, ஒரு கும்பல், 1.5 டன் மூங்கில் மரங்களை வெட்டி, வேனில் ஏற்றிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.
அக்கும்பலை அவர்கள், மூங்கில் மற்றும் வேனுடன் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
இதில், தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி, 67, விருபாட்சிபுரம் ரவி, 52, அப்புக்கல் சந்தோஷ்குமார், 36, என தெரிந்தது. அவர்களை கைது செய்து, 90,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.