sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

வயலை உழுத போது சிக்கிய 4 நாட்டு வெடிகுண்டுகள்

/

வயலை உழுத போது சிக்கிய 4 நாட்டு வெடிகுண்டுகள்

வயலை உழுத போது சிக்கிய 4 நாட்டு வெடிகுண்டுகள்

வயலை உழுத போது சிக்கிய 4 நாட்டு வெடிகுண்டுகள்


ADDED : அக் 29, 2024 11:14 PM

Google News

ADDED : அக் 29, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த மேலரசம்பட்டை சேர்ந்தவர்கள் இந்திரகுமார், பாஸ்கர், சிவா, சாமிநாதன் உள்ளிட்ட நால்வரின் விவசாய நிலம் அருகருகே உள்ளது. அதில் வீடு கட்டி வசிக்கின்றனர். பாஸ்கரின் இரு நாய்களும், இந்திரகுமாரின் நிலத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை கடித்ததால் பலியாகின. பாஸ்கர், வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், சிவா, நேற்று முன்தினம் மாலை, தன் நிலத்தில் டிராக்டரில் உழுத போது, தட்டுப்பட்ட பொருளை எடுத்து பார்த்தபோது, அது நாட்டு வெடிகுண்டு என தெரிந்தது. உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, சோதனை செய்ததில், சிவா நிலத்தில் இரண்டு நாட்டு வெடிகுண்டு, சாமிநாதன் நிலத்தில் இரண்டு நாட்டு வெடிகுண்டு என, நான்கு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அதை வைத்தது யார் என, வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us