/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு
/
சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு
சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு
சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு
ADDED : நவ 09, 2024 02:46 AM
வேலுார்:வேலுார் அருகே, சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில், 40 சவரன் நகையை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சந்தனகொட்டாயை சேர்ந்தவர் மணி, 45, மேல்வல்லம் சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் மணி பணிக்கு சென்றார். வீட்டில் உள்ளவர்கள், வீட்டை பூட்டி கொண்டு விவசாய பணிக்கு சென்றுவிட்டனர். மணி பணி முடிந்து இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 40 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.