/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சூறாவளி காற்றால் 5,000 வாழை நாசம்
/
சூறாவளி காற்றால் 5,000 வாழை நாசம்
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
வேலுார்: வேலுார் அருகே நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 5,000 வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின.
வேலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை, வேலுார், காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல பகுதிகளில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. வேலுாரை அடுத்த ஒடுகத்துாரில் சூறாவளி காற்றால், 5,000 வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின.
திருப்பத்துார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருப்பத்துார், வாணியம்பாடி, செட்டியப்பனுார், கொத்தகோட்டை, நிம்மியம்பட்டு, வெள்ளகுட்டை, ஆலங்காயம், பூங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. பூங்குளம் கிராமத்தில் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.

