/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுார் மாநகராட்சிக்கு ரூ.88 லட்சம் அபராதம்
/
வேலுார் மாநகராட்சிக்கு ரூ.88 லட்சம் அபராதம்
ADDED : மார் 01, 2024 01:06 AM
வேலுார்:வேலுார் மாநகராட்சியில், தினமும், 200 - 250 டன் குப்பை சேகரமாகிறது. கிடங்குகளில் குப்பை பிரிக்கப்பட்டு, அதில் உருவாகும் மண், கட்டட கழிவுகள் பாலாற்றில் கொட்டப்படுகின்றன.
இது குறித்து வந்த புகாரால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, வேலுார் மாநகராட்சி நிர்வாகத்திற்கு, 88 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
பாலாற்றை ஒட்டிய, ராணிப்பேட்டை, வேலுார் மற்றும் திருப்பத்துார் மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களுக்கும், பாலாற்றில் குப்பை கொட்டக் கூடாதென, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வேலுார் மாநகராட்சி கமிஷனர் ஜானகி கூறுகையில், ''அபராத தொகையை செலுத்த ஓராண்டு அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. குப்பையை அகற்ற அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத நான்கு குவாரிகளை அடையாளம் கண்டு, இரு குவாரிகளில் கழிவை கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

