தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/பள்ளி விழாவில் மயங்கி விழுந்த மாணவி பலி

பள்ளி விழாவில் மயங்கி விழுந்த மாணவி பலி

பள்ளி விழாவில் மயங்கி விழுந்த மாணவி பலி


ADDED : ஜன 13, 2024 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2024 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்:வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தை சேர்ந்தவர் பெயின்டர் சுதாகர், 40. இவரது மகள் யோகேஸ்வரி, 7, கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். பள்ளியில், நேற்று முன்தினம் மாலை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டி நடந்தது. இதில் யோகேஸ்வரி, பிளாஸ்டிக் பந்து போட்டியில் விளையாடியபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்த சிறுமி யோகேஸ்வரி வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 1ம் தேதி முதல், மருந்து எதுவும் எடுக்கவில்லை எனவும் தந்தை சுதாகர் கூறினார். விரிஞ்சிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us