/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பெண் டாக்டரை மிரட்டி ரூ.83 லட்சம் 'அபேஸ்'
/
பெண் டாக்டரை மிரட்டி ரூ.83 லட்சம் 'அபேஸ்'
ADDED : நவ 13, 2025 02:09 AM
வேலுார்: பெண் டாக்டரை மிரட்டி, 83 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர், 86 வயது மூதாட்டி. இவர், ஆம்பூரில் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரு மகள்கள் அமெரிக்காவில் டாக்டர்களாக உள்ளனர். மூதாட்டி வயது முதிர்வு காரணமாக பராமரிப்பாளர் ஒருவருடன் வீட்டில் வசிக்கிறார்.
இவரை, கடந்த மாதம் ஒருவர் வீடியோ காலில் அழைத்து, மும்பை சி.பி.ஐ., கிரைம் போலீசில் இருந்து பேசுவதாக தெரிவித்து, 'உங்கள் ஆதார், பான் கார்டுகளை வைத்து பண மோசடி நடந்துள்ளது.
'இது சம்பந்தமாக நாங்கள் வழக்கு பதிவு செய்து உங்களை, 'டிஜிட்டல்' கைது செய்துள்ளோம். உங்கள் வங்கி கணக்கு விவரங்களை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து அனுப்ப வேண்டும்' என, தெரிவித்தார்.
மேலும், ஒரு மாதமாக மூதாட்டியிடம் வீடியோ காலில் பேசி வந்தார். இதை நம்பிய அவர், தன் வங்கி கணக்கு விபரங்களை அனுப்பினார். அதன்படி, 'மியூச்சுவல் பண்டில் 83 லட்சம் ரூபாய் உள்ளது.
'உங்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது' என, மிரட்டி அந்த தொகையை ஆன்லைனில் பெற்று, மோசடி நபர் ஏமாற்றி உள்ளார்.
புகாரின்படி, வேலுார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

