/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'டிமிக்கி' கொடுத்த குட்கா கடத்தல்காரர்கள் 15 கி.மீ., விரட்டிய போலீசார்

ADDED : நவ 13, 2025 11:20 PM
திருவலம்: வாகன தணிக்கையின் போது, காரை நிறுத்துவது போல பாவனை செய்து தப்பிச்சென்ற குட்கா வியாபாரிகள் இருவரை, 15 கி.மீ., துாரம் விரட்டிச் சென்று ஐ.ஜி., தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, நேற்று முன்தினம் மாலை வேலுார் வழியாக சென்னைக்கு காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார், நேற்று முன்தினம் இரவு தமிழக - ஆந்திர எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ய முயன்ற போது, காரை நிறுத்துவது போல் பாவனை செய்த மர்ம நபர்கள், மீண்டும் அதிவேகத்தில் சென்னை நோக்கி சென்றனர்.
உஷாரான போலீசார், தங்கள் வாகனத்தில், காரை 15 கி.மீ., துாரம் விரட்டி சென்று, திருவலம் இ.பி., சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த வாகன சோதனையில் மடக்கி பிடித்தனர். விசாரணையில், காரில் இருந்தவர்கள், பொன்னை அடுத்த ஒட்டனேரியை சேர்ந்த சக்தி கணேஷ், 26, ஆனந்தராஜ், 25, என, தெரிய வந்தது.
காரை சோதனையிட்டபோது, 129 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. திருவலம் போலீசார், கார், குட்காவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.