/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பரிசு அனுப்புவதாக கூறி மாணவனிடம் பணம் பறிப்பு
/
பரிசு அனுப்புவதாக கூறி மாணவனிடம் பணம் பறிப்பு
ADDED : நவ 13, 2025 11:20 PM
குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவரது சகோதரியின் மொபைல் போன் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன், தமிழில் குறுஞ்செய்தி வந்தது.
அதில், 'உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து 70,000 டாலர் மதிப்புள்ள கிப்ட் வந்துள்ளது; அதற்கு சுங்க கட்டணமாக 45,000 ரூபாய் செலுத்த வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
அந்த மாணவன், தன் அக்காவின் வங்கி கணக்கில் இருந்து, 45,000 ரூபாயை அனுப்பி உள்ளார்.
அதன் பின், மர்ம நபர்களை சிறுவனால் தொடர்புகொள்ள முடியவில்லை. சிறுவனின் பெற்றோர் புகாரின்படி, வேலுார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
'அறிமுகம் இல்லாத மொபைல் எண்ணில் இருந்து தேவையற்ற அழைப்பு வந்தாலோ, குறுஞ்செய்தி வந்தாலோ நம்பக்கூடாது; பெற்றோர் அல்லது பெரியவர்களிடம் இதுகுறித்து கேட்க வேண்டும்' என, அதிகாரிகள் சிறுவனுக்கு அறிவுரை கூறினர்.

