/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தனக்கு தானே கழுத்தை அறுத்து முதியவர் விபரீத முடிவு
/
தனக்கு தானே கழுத்தை அறுத்து முதியவர் விபரீத முடிவு
தனக்கு தானே கழுத்தை அறுத்து முதியவர் விபரீத முடிவு
தனக்கு தானே கழுத்தை அறுத்து முதியவர் விபரீத முடிவு
ADDED : ஜூலை 12, 2025 01:50 AM
வேலுார் :வேலுாரில், உடல் உபாதையால் தனக்கு தானே முதியவர் கழுத்தை அறுத்து கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் டவுன் அரசமரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி முத்து, 65. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, விபத்தில் சிக்கி தலையில் பின்புறம் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக, உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு துன்புறுத்தி வந்த நிலையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனியாக வீட்டில் இருந்தபோது, கத்தியால் தனக்கு தானே இடது பக்கம் கழுத்தில் அறுத்துக் கொண்டார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகார்படி, வேலுார் வடக்கு போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, முத்து இறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து, வடக்கு போலீசார் விசாரித்து
வருகின்றனர்.