/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
அங்கன்வாடி ஊழியர் மறியல்: 98 பேர் கைது
/
அங்கன்வாடி ஊழியர் மறியல்: 98 பேர் கைது
ADDED : டிச 10, 2025 09:31 AM

வேலுார்: காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலுாரில் சாலை மறியல் செய்த, 98 அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில் வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மறியல் நடந்தது. சங்கத்தின் மாவட்ட செயலர் ஜூலி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் தேவி, போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
அப்போது, 1993ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட, 98 அங்கன்வாடி ஊழியர்களை, போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை அருகே மறியலில் ஈடுபட்ட, 80க்கும் மேற்பட்டவர்களை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

