/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கோர்ட்டில் கூட்டாளியை மிரட்டியவர் மீது உடனே பாய்ந்தது இன்னொரு வழக்கு

ADDED : நவ 23, 2025 02:20 AM
வேலுார்: வேலுார் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையின் போதே, 'உன்னால் தான் நான் வழக்கில் சிக்கியுள்ளேன்.
'வழக்கு செலவுக்கு பணம் தர வேண்டும்' என, கூட்டாளியை பணம் கேட்டு மிரட்டியவர் மீது உடனே புதிய வழக்கு பாய்ந்தது.
வேலுார் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 2015ல் நடந்த ஒரு கொலை தொடர்பாக, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் விசாரணைக்காக, நாமக்கல் மாவட்டம், அகரம்பட்டியை சேர்ந்த பிரம்மகுரு, 36, வேலுார் மாவட்டம், ஒடுகத்துாரை சேர்ந்த விநாயகம், 58, ஆகியோர், நேற்று முன்தினம், வேலுார் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அப்போது, பிரம்மகுரு, 'உன்னால் தான் வழக்கில் சிக்கினேன்; வழக்கு செலவிற்கு பணம் தர வேண்டும்' என, விநாயகத்தை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, பணம் கேட்டு மிரட்டுவதாக பிரம்மகுரு மீது, நீதிபதியிடம் விநாயகம் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சத்துவாச்சாரி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். போலீசார் வழக்குப்பதிந்து, பிரம்மகுருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.