/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
குழந்தை தொழிலாளர் மின்சாரம் பாய்ந்து பலி
/
குழந்தை தொழிலாளர் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : நவ 23, 2025 02:08 AM
பாகாயம்: வேலுார் அருகே மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்த குழந்தை தொழிலாளர் உயிரிழந்தார்.
வேலுார், பாரதியார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்கள் மகன் கோகுல் பிரசாத், 17. இவர், கமலாச்சிபுரம், 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆட்டோ ஒர்க்ஸ்' மெக்கானிக் ஷாப்பில், மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இவர், தினமும் மெக்கானிக் கடையில் வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்வது வழக்கம். நேற்று மதியம் வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
கடை உரிமையாளர் வெங்கடேசன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பாகாயம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே கோகுல் பிரசாத் இறந்து விட்டதாக கூறினர். உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

