100 நாள் வேலை திட்டம் குறித்து விவசாயிகளிடையே வாக்குவாதம்
100 நாள் வேலை திட்டம் குறித்து விவசாயிகளிடையே வாக்குவாதம்
UPDATED : அக் 13, 2026 10:13 PM
ADDED : அக் 13, 2026 07:38 PM
குடியாத்தம்: விவசாயப் பணிகளுக்கு, 100 நாள் வேலை திட்டத்தால் ஆட்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்த விவகாரத்தில், இரு தரப்பு விவசாயிகளிடையே குறை தீர்வு கூட்டத்தில், வாக்குவாதம் ஏற்பட்டது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் கோட்டாச்சியர் அலுவலகத்தில், குடியாத்தம் கோட்டத்திற்குட்பட்ட குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், குறை தீர்வு கூட்டம் குடியாத்தம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வடிவேலு தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்படைவதாகவும், 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு தரப்பு விவசாயிகள் பேசினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு விவசாயிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதனர். இதனால், கூட்டத்தில் கடும் அமளி நிலவியது.
தொடர்ந்து, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
