/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாமனார் வீட்டில் 60 சவரன் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது
/
மாமனார் வீட்டில் 60 சவரன் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது
மாமனார் வீட்டில் 60 சவரன் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது
மாமனார் வீட்டில் 60 சவரன் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது
ADDED : நவ 21, 2024 06:12 AM

வேலுார்: வேலுார் அடுத்த இடையம்பட்டியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பி.டி.ஓ., சாலமன், 67. இவரது மனைவி மேரிஷெலின். இவர்களது மகன் அலெக்ஸ் தேவபிரசாத், 35, மகள் ராதிகா, 30. இவரது கணவர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெபத்துரை, 34.
கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், சாலமன் மனைவி மேரிஷெலின் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், சாலமனுடன் மகள் ராதிகா, மருமகன் ஜெபத்துரை தங்கியிருந்தனர். அப்போது சாலமன் வீட்டில், 60 சவரன் நகை இருப்பதை ஜெபத்துரை அறிந்தார்.
கடந்த, 14ல், ஜெபத்துரை, ராதிகா ஆகியோர், திருவள்ளூரிலுள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர்.
சாலமன், சென்னையில் வசிக்கும் மகன் அலெக்ஸ் தேவபிரசாத் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், வீட்டினுள் பீரோவிலிருந்த, 60 சவரன் நகை திருடு போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவர் புகாரின் படி, பாகாயம் போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், மருமகன் ஜெபத்துரை, அவரது நண்பர் உசேன் ஆகியோர், சாலமன் வீட்டிற்கு வந்து சென்றது தெரிந்தது. போலீசார் ஜெபத்துரையை பிடித்து விசாரித்ததில், 60 சவரன் நகையை திருடியதை ஒப்பு கொண்டார்.
நகையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து, தலைமறைவான உசேனை தேடி வருகின்றனர்.

