/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கள்ளக்காதலியை அடித்து கொன்று காதலன் துாக்கிட்டு தற்கொலை
/
கள்ளக்காதலியை அடித்து கொன்று காதலன் துாக்கிட்டு தற்கொலை
கள்ளக்காதலியை அடித்து கொன்று காதலன் துாக்கிட்டு தற்கொலை
கள்ளக்காதலியை அடித்து கொன்று காதலன் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 24, 2025 02:21 AM

வேலுார்:பேசாத ஆத்திரத்தில் கள்ளக்காதலியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து, காதலனும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார், விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ், 35; தனியார் ஷூ நிறுவன தொழிலாளி. வேலுார், சின்ன அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் சபீனா பானு, 33. இரண்டாண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்தார்; குழந்தை இல்லை.
சுரேஷ் பணிபுரியும் அதே ஷூ நிறுவனத்தில், அவர் வேலை செய்து வந்ததால், இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
ஆறு மாதங்களாக சுரேஷ் வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்தார். இதனால், அவரிடம் சபீனா பானு, இரு மாதங்களாக பேசுவதை தவிர்த்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அவர், சபினா பானுவிடம் பேச முயன்றார். அவர் மொபைல் போனை எடுக்கவில்லை.
ஆத்திரமடைந்த சுரேஷ், இரவு கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று, அவரிடம், வேறு யாருடனாவது தொடர்பு வைத்துள்ளாயா என கேட்டு, இரும்பு ராடால் தாக்க முயன்றார்.
அவரது தந்தை சிராஜுதீன், தாய் ஆஜீரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் இரும்பு ராடால் தாக்கியதில் மயக்கமடைந்தனர். சபீனா பானு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
அவரை துரத்தி சென்று, இரும்பு ராடால் அடித்து கொலை செய்தார். பின், சுரேஷ் அவரது வீட்டிற்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.