/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
/
சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : மே 15, 2025 01:24 AM
குடியாத்தம், குடியாத்தத்தில், கங்கையம்மன் திருவிழாவில் நடந்த தேரோட்டத்தின்போது தேர் சக்கரம் கழிவுநீர் கால்வாயில் இறங்கி சாய்ந்ததால், பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், கங்கையம்மன் சிரசு திருவிழாவையொட்டி நேற்று, கங்கையம்மன் தேர் திருவிழா காலை, 10:00 மணியளவில் நடந்தது. மாலை, 5:30 மணியளவில், 25 அடி அகலமுள்ள கண்ணகி தெருவில் தேர் சென்றது. அப்போது, போலீசாரும்,
வருவாய்த்துறையினரும், இரவு, 9:00 மணிக்குள் தேரை நிலைநிறுத்த, தேர்கட்டை போடுபவர்களிடம் அழுத்தம் கொடுத்தனர். இதனால், தேரை வேகமாக இழுத்து சென்றதில், கண்ணகி தெருவில், 5 டன் எடையுள்ள தேர், திடீரென கழிவுநீர் கால்வாயில் இறங்கி
ஒரு பக்கமாக சாய்ந்தது.
இதனால், பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு இரவு, 7:30 மணியளவில் கால்வாயிலிருந்து தேரை மீட்டு, மீண்டும் தேரோட்டம் நடத்தப்பட்டது.