/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பட்டாவுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்சம் தி.மு.க., கவுன்சிலர் வீடியோ வெளியீடு
/
பட்டாவுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்சம் தி.மு.க., கவுன்சிலர் வீடியோ வெளியீடு
பட்டாவுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்சம் தி.மு.க., கவுன்சிலர் வீடியோ வெளியீடு
பட்டாவுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்சம் தி.மு.க., கவுன்சிலர் வீடியோ வெளியீடு
ADDED : ஏப் 18, 2025 02:19 AM
வேலுார்:வேலுார் மாநகராட்சியில், பட்டா வழங்க வருவாய்த் துறையினர், 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக, தி.மு.க., கவுன்சிலர் பதிவிட்ட வீடியோ பரவி வருகிறது.
வேலுார் மாநகராட்சியில், 2வது மண்டலத்திற்கு உட்பட்ட, 27வது வார்டு, நேரு நகர், வ.உ.சி., நகர், மலைமேடு பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக, பொதுமக்கள், 2,000 வீடுகள் கட்டி வசிக்கின்றனர். அவர்களுக்கு, அடுத்த மாதம் வேலுாருக்கு வரும் முதல்வர் பட்டா வழங்க உள்ளார். பட்டா பெற தகுதியுள்ளோரை முறைப்படுத்தும் பணியில், வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பட்டா பெற தகுதியுள்ளோர் வீடுகளுக்குச் சென்று, வீட்டில் ஏசி, பிரிஜ், டிவி, கார் ஆகியவை இருந்தால், பட்டா வழங்க மாட்டோம் என்றும், பட்டா வேண்டுமென்றால், 1 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை, ஆட்களுக்கு தகுந்தவாறு லஞ்சம் கேட்டு மிரட்டுகின்றனர்.
பொதுமக்கள், அந்த வார்டு, தி.மு.க., கவுன்சிலர் சதீஷிடம் முறையிட்டனர். அவர், வருவாய்த் துறை அதிகாரிகளை அணுகி, விபரங்களை கேட்டுள்ளார்.
அதிகாரிகள், முறையாக பதில் கூறாமல் அலைக்கழித்ததால், ஆத்திரமடைந்த கவுன்சிலர் சதீஷ், 'வருவாய்த் துறை அதிகாரிகள், பட்டா வழங்க லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு பரப்பி உள்ளார்.
தி.மு.க., கவுன்சிலரே அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியிட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

