/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மண் கடத்திய தி.மு.க., கவுன்சிலரின் லாரி பறிமுதல்; அதிகாரிகள் அதிரடி

ADDED : ஜன 25, 2024 01:06 PM
ஒடுகத்துார் : ஒடுகத்துார் அருகே மண் கடத்திய, தி.மு.க., கவுன்சிலரின் லாரியை, கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டாவில், முரம்பு மண் கடத்துவதாக வந்த புகார் படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையிலான அதிகாரிகள், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலையில், நேற்று வாகனச்சோதனை நடத்தினர். அப்போது, முரம்பு மண் கடத்திச் சென்ற லாரியை மடக்கி பிடித்து, பள்ளிகொண்டா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட லாரி அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லுார் பஞ்சாயத்தை சேர்ந்த, தி.மு.க., கவுன்சிலர் மகாலிங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிக்கொண்டா போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான, தி.மு.க., கவுன்சிலர் மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.