/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிறைக்கு தான் போகணும் சொல்கிறார் துரைமுருகன்
/
சிறைக்கு தான் போகணும் சொல்கிறார் துரைமுருகன்
ADDED : செப் 22, 2024 02:16 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த குகையநல்லுாரில் பொன்னை ஆற்றின் குறுக்கே, 12.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையை திறந்து வைத்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
இந்த தடுப்பணையை கட்டியவர்கள் இன்னும் வேகமாக கட்டியிருக்கலாம். அணையை பலமாக கட்டி யிருக்கிறீர்களா அல்லது சரியில்லாமல் கட்டியுள்ளீர்களா என, அதிக வெள்ளம் வரும் போது தெரியும். சரியில்லாமல் கட்டியிருந்தால், இதை கட்டியவர்கள் ஜெயிலுக்கு தான் போக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, பாலாறு அணைக்கட்டை ஆய்வு செய்தபோது அவரிடம், 'அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆவாரா?' என, கேட்டபோது, ''இந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது,'' என்றார்.