/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுாரில் டிஜிட்டல் கைது எனக்கூறி மூதாட்டியிடம் ரூ.21.30 லட்சம் மோசடி
/
வேலுாரில் டிஜிட்டல் கைது எனக்கூறி மூதாட்டியிடம் ரூ.21.30 லட்சம் மோசடி
வேலுாரில் டிஜிட்டல் கைது எனக்கூறி மூதாட்டியிடம் ரூ.21.30 லட்சம் மோசடி
வேலுாரில் டிஜிட்டல் கைது எனக்கூறி மூதாட்டியிடம் ரூ.21.30 லட்சம் மோசடி
ADDED : செப் 26, 2025 10:44 PM
வேலுார்:வேலுாரில், மூதாட்டியிடம் டிஜிட்டல் கைது எனக்கூறி, 21.30 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
வேலுார், சத்துவாச்சாரியை சேர்ந்தவர், 72 வயது மூதாட்டி. இவருக்கு, செப்., 20ம் தேதி காலை வந்த மொபைல்போன் அழைப்பில், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பேசுவதாக கூறியுள்ளனர்.
மூதாட்டி, தீவிரவாத குழுவுடன் தொடர்பை ஏற்படுத்தி, அதன் வாயிலாக, 50 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று இருப்பதாக கூறி, டிஜிட்டல் கைது செய்வதாக கூறியுள்ளனர். குறிப்பிட்ட தொகையை தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பினால், சரிபார்த்துவிட்டு திரும்ப செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளனர்.
அதை உண்மை என நம்பி, 21.30 லட்சம் ரூபாயை மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு மூதாட்டி அனுப்பியுள்ளார். பின், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மூதாட்டி புகாரில், வேலுார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல, வேலப்பாடியை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற தகவலை சமூக வலைதளத்தில் பார்த்தார்.
இதில் ஆர்வமடைந்த அவர், 13.19 லட்சம் ரூபாயை ஜன., 19ல் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். பின், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அந்த நபர் புகாரின்படி, வேலுார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.