/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கொசுக்களுக்கு கருத்தடை கவுன்சிலர் கோரிக்கை மாநகராட்சி கூட்டத்தில் 'லகலக'

ADDED : செப் 27, 2025 02:05 AM

வேலுார்:வேலுார் மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
மேயர் சுஜாதா தலைமை வகித்தார். வேலூர் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், துணை மேயர் சுனில் குமார், கமிஷனர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பங்கேற்று தங்கள் பகுதிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
அப்போது, கவுன்சிலர் லோகநாதன் பேசும்போது, 'எங்கள் வார்டில் மூன்று ஆண்டுகளாக கொசு மருந்து அடிக்கவில்லை. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது போல, கொசுக்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். விரைவில் மழைக்காலம் வரவுள்ளது' என்றார் .
இதற்கு பதிலளித்த மேயர் சுஜாதா, 'கொசுக்களுக்கு கருத்தடை செய்வது குறித்து உங்களுக்கு ஏதேனும் ஐடியா இருந்தால் சொல்லுங்கள்' என தெரிவிக்க கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
இவ்வாறு விவாதம் நடந்தது.