/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுார் கோட்டையில் பாழாகும் '3டி தியேட்டர்' 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மர்மம்
/
வேலுார் கோட்டையில் பாழாகும் '3டி தியேட்டர்' 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மர்மம்
வேலுார் கோட்டையில் பாழாகும் '3டி தியேட்டர்' 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மர்மம்
வேலுார் கோட்டையில் பாழாகும் '3டி தியேட்டர்' 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மர்மம்
ADDED : செப் 28, 2025 03:07 AM

வேலுார்:வேலுார் கோட்டை பூங்காவில், சிப்பாய் கலக வரலாற்றை விளக்கும் வகையில், பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய '3டி தியேட்டர்' கட்டப்பட்டு, மூன்றாண்டுகளாக பயன்பாட்டிற்கு வராததால், 5.60 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு கொண்ட வேலுார் கோட்டை, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கோட்டை முழுதும் கருங்கற்களால் அழகிய அகழியுடன் கட்டப்பட்டுள்ளது. ஒரே நுழைவாயில் கொண்ட இந்த கோட்டை, 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோட்டை முன் பசுமையான பூங்கா உள்ளது.
வேலுார் கோட்டையில் சுற்றுலா பயணியருக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒளி, ஒலியுடன் கூடிய 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி நவீன வசதிகளுடன் கொண்டு வரப்பட்டது. இதற்காக கோட்டை பெரியார் பூங்காவில், பெரிய அளவிலான இரு புரொஜக்டருடன் கூடிய தியேட்டர் கட்டப்பட்டது.
சுற்றுலா பயணியர் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டன. சோதனை ஒளிபரப்பு நடந்தது. பின், இதுநாள் வரை 3டி நிகழ்ச்சி பயன்பாட்டுக்கு வரவில்லை.
பொதுமக்கள் கூறுகையில், 'வேலுார் மாவட்டத்தில், பெரிய அளவில் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் இல்லை. வேலுார் மாநகராட்சி சார்பில், வேலுார் கோட்டையில் 3டி தியேட்டர் அறை கட்டப்பட்டும், இதுவரை 3டி நிகழ்ச்சி பயன்பாட்டிற்கு வரவில்லை. 5.60 கோடி ரூபாய் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
வேலுார் மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் கூறுகையில், ''வேலுார் கோட்டை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், நாம் இதற்காக அனுமதி கேட்டுள்ளோம்,'' என்றார்.