/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வீட்டிற்குள் லாரி புகுந்ததில் மூதாட்டி பலி
/
வீட்டிற்குள் லாரி புகுந்ததில் மூதாட்டி பலி
ADDED : டிச 27, 2025 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னை: வீட்டிற்குள் புகுந்த லாரி மோதியதில், மூதாட்டி உயிரிழந்தார். வேலுார் மாவட்டம், மாதாண்டகுப்பத்தை சேர்ந்தவர் கங்கம்மாள், 70. திருவலம் - பொன்னை சாலையோரம் இவரது வீடு உள்ளது.
இவர் வீட்டினுள் இருந்த போது, சென்னையில் இருந்து சித்துார் நோக்கி வந்த டிப்பர் லாரி, இவரது வீட்டு சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்து கங்கம்மாள் மீது மோதியது.
இதில், இவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தார். பொன்னை போலீசார், அசாம் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் விஸ்வாஜித் தஸ்பே, 43, என்பவரை கைது செய்தனர்.

