/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு
ADDED : ஆக 10, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்,:வேலுாரில், கிரைண்டரில் இஞ்சி அரைத்த போது, மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 23. இவர், வேலுார் பெரிய அல்லாபுரம் பகுதியில், ஓட்டலில் பணியாற்றி வந்தார். நேற்று காலை ஓட்டலில் பிரியாணி செய்ய, கடையிலுள்ள கிரைண்டரில் இஞ்சி, பூண்டு விழுது அரைத்தார். அப்போது, அவர் மீது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.