/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது
/
வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது
ADDED : மே 05, 2025 03:49 AM
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே, சமையல் காஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் தயாரித்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டை சேரியை சேர்ந்த முத்து என்பவர், விவசாய நிலத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர், தன் வீட்டில், சமையல் காஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு கள்ளச்சாராயம் வாங்குவது போல மாறு வேடத்தில், பேரணாம்பட்டு போலீசார் சென்றனர். அப்போது அங்கு, கள்ளச்சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின், முத்து, 53, அவரது மகன் யுவராஜ், 26, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் போலீசார், கோட்டைசேரி கிராமத்தில் முகாமிட்டு, வேறு எங்காவது கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனரா என, சோதனை நடத்தி வருகின்றனர்.