/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தந்தை - மகன்கள் உயிரிழப்பு; மின்வேலி அமைத்தவர் கைது
/
தந்தை - மகன்கள் உயிரிழப்பு; மின்வேலி அமைத்தவர் கைது
தந்தை - மகன்கள் உயிரிழப்பு; மின்வேலி அமைத்தவர் கைது
தந்தை - மகன்கள் உயிரிழப்பு; மின்வேலி அமைத்தவர் கைது
ADDED : டிச 03, 2025 03:40 AM
ஒடுகத்துார்: ஒடுகத்துார் அருகே மின்வேலியில் சிக்கி, தந்தை, இரு மகன்கள் உயிரிழந்த நிலையில், வேலி அமைத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் ராமநாயினிகுப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன், 55; நர்சரி பண்ணை வைத்திருந்தார். இவரது மனைவி மல்லிகா, 50; தம்பதிக்கு விகாஷ், 25; லோகேஷ், 23; ஜீவா, 22; என, மூன்று மகன்கள் உள்ளனர். இதில், விகாஷுக்கு மனைவி, குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் விகாஷ், ஜீவாவை அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு நர்சரிக்கு ஜானகிராமன் சென்றபோது, அதை ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்குகளுக்கு வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி துடித்தார்.
மகன்கள் இருவரும் அப்பாவை காப்பாற்ற முயற்சித்த போது, அவர்களும் மின் வேலியில் சிக்கினர். இதில், மூவரும் உயிரிழந்தனர். வேப்பங்குப்பம் போலீசார், மின்வேலி அமைத்த குப்பம்பட்டுவை சேர்ந்த விவசாயி சங்கர், 52, என்பவரை கைது செய்தனர்.

