/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கோயில் கட்ட கடன் வாங்கி மோசடி செய்த பெண் போலீஸ்
/
கோயில் கட்ட கடன் வாங்கி மோசடி செய்த பெண் போலீஸ்
ADDED : நவ 05, 2025 02:06 AM
வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகா, இளையநல்லுார் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகா, மேல்பாடி காவல் நிலையத்தில் ஜோதி என்ற பெண் போலீஸ், 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், 2019ம் ஆண்டு, தங்கள் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதாகவும், சிறிது நாட்கள் கழித்து பணத்தை திருப்பி தருவதாகவும் தெரிவித்தார்.
இதை நம்பி நானும், 50,000 ரூபாய் கடன் கொடுத்தேன். பின், கோயி லுக்கு பைப் லைன் அமைக்க, மின் இணைப்பு வாங்க, கதவு அமைக்க ஆகிய பணிகளுக்காக மேலும், 50,000 ரூபாயை என்னிடம் வாங்கினார்.
ஆறு மாதங்கள் கழித்து என்னுடன் பேசுவதை தவிர்த்து, என் வாட்ஸ் ஆப் எண்ணை, 'பிளாக்' செய்தார். அவரது உறவினர்களிடம் கேட்டால், நான் கோயி லுக்கு நன்கொடை கொடுத்ததாகவும், கடனுக்கு அவர் பணம் தரவில்லை எனவும் தெரிவிக்கிறார்.
கொடுத்த பணத்திற்கு ரசீதும் தரவில்லை. பணம் கேட்டால், 'பணமெல்லாம் தர முடியாது; வேண்டுமானால் கோயி ல் கதவை கழற்றி எடுத்து செல்லுங்கள்' என, அலட்சியமாக கூறுகிறார். 'இனி பணம் கேட்டால், எங்கள் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு செத்து விடுவோம்' என, அவரது கணவர் கூறுகிறார்.
பெண் போலீஸ் ஜோதி, அவரது கணவருக்கு உடல்நலக்குறைவு உள்ளது. அவர்களுக்கு தற்செயலாக ஏதாவது ஏற்பட்டால் நான் பொறுப்பேற்க முடியாது. அவருக்கு நான், 2 ரூபாய் வட்டிக்கு வாங்கி தான் பணம் கொடுத்தேன்.
தற்போது வரை வட்டி செலுத்தி வருகிறேன். அவரிடம் இருந்து என் பணத்தையும், வட்டியையும் மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

