/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கோவிலில் தேங்கியுள்ள மழைநீர்: பக்தர்கள் அவதி
/
கோவிலில் தேங்கியுள்ள மழைநீர்: பக்தர்கள் அவதி
ADDED : நவ 06, 2025 01:20 AM

வேலுார்: வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீரால், பக்தர்கள் அவதியடைந்தனர்.
வடகிழக்கு பருவ மழையால் வேலுார் கோட்டை அகழி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. கோவில் வளாகம் முழுதும் மழைநீர் தேங்கியது.
அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தரைதளத்தில், பாசி படிந்து பக்தர்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, தேங்கிய மழைநீரில் மரப்பலகைகளை போட்டு வைத்துள்ளனர்.
இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:
வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த, 1991ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டுகளில் மழை பெய்த போது, கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
தற்போது பெய்த மழையில் மீண்டும் தண்ணீர் கோவிலுக்குள் புகுந்து உள்ளது. இந்த தண்ணீரையும் முறையாக வெளியேற்றுவரா என்பது தெரியவில்லை.
அதிகாரிகள் கண்துடைப்புக்கு மட்டும் இல்லாமல், நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

