/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதி
/
வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதி
வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதி
வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதி
ADDED : நவ 07, 2025 02:16 AM

ஒடுகத்துார்: கனமழையால், நேமந்தபுரம் செல்லும் தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.
வேலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், லேசான சாரல் மழை பெய்தது. நேற்று காலை 9:00 மணி முதல், திடீரென கன மழை பெய்ய தொடங்கியது.
கரடிகுடி, குருவராஜ பாளையம், கீழ்கொத்துார், வரதலம்பட்டு, ஒடுகத்துார், சேர்பாடி, கெங்கசாணி குப்பம், பெரிய ஏரியூர், கொட்டாவூர், மேல அரசம்பட்டு.
தென்புதுார், சின்னப்பள்ளி குப்பம், அரிமலை, குப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், கனமழை கொட்டி தீர்த்தது.
இடைவிடாமல், 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால், ஒடுகத்துார் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், ஒடுகத்துார் - நேமந்தபுரம் செல்லும் உத்திரக்காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மண் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதிக்கு செல்ல வேண்டிய வழி துண்டிக்கப்பட்டு, 2 கி.மீ., சுற்றி சென்றனர்.