/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தனியார் 'டிவி' ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
/
தனியார் 'டிவி' ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
தனியார் 'டிவி' ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
தனியார் 'டிவி' ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
ADDED : நவ 07, 2025 02:17 AM

வேலுார்: வேலுாரில், தனியார் 'டிவி' ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, வேலுார் மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
வேலுார், கொசப்பேட்டை, எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார், 35, தனியார் டிவி ஒன்றின் ஒளிப்பதிவாளர். அவர் வசிக்கும் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் அடிக்கடி சோதனை செய்து வந்தனர்.
இதனால், அதே பகுதியை சேர்ந்த திருமலை, 36, மற்றும் 17 வயது சிறுவன், 'அசோக்குமார் தான், போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்' என கருதினர். கடந்த, 2018ம் ஆண்டு மே 24ம் தேதி, வீட்டில் இருந்த அசோக்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். வேலுார் தெற்கு போலீசார் வழக்குபதிந்து திருமலை மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலுார் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கோகுலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் திருமலைக்கு ஆயுள் தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். சிறுவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடக்கிறது.

