/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது
/
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது
ADDED : டிச 15, 2024 03:33 AM
வேலுார்: வேலுார் அருகே பட்டா மாறுதலுக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்-தனர்.
வேலுார் மாவட்டம் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் சரஸ்-வதி, 45; தனது நிலத்தின் பட்டா மாறுதல் செய்து தர அப்பகுதி வி.ஏ.ஓ., ஷர்மிளா, 52, என்பவரை அணுகினார். அதற்கு, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.இதுகுறித்து வேலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம்,
சரஸ்வதி புகார் செய்தார். அவர்களின் திட்டப்படி அலமேலு மங்-காபுரம் அலுவலகத்தில் வி.ஏ.ஓ., ஷர்மிளா இருந்தபோது, 5,000 ரூபாயை லஞ்சமாக சரஸ்வதி நேற்று கொடுத்தார். அதை பெற்ற ஷர்மிளாவை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.