/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
நிதி நிறுவன மேலாளர் பண நஷ்டத்தால் தற்கொலை
/
நிதி நிறுவன மேலாளர் பண நஷ்டத்தால் தற்கொலை
ADDED : ஆக 04, 2025 12:41 AM
வேலுார்; ஆன்லைன் டிரேடிங்கில், 50 லட்சம் ரூபாயை இழந்ததால், தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம், செதுக்கரையை சேர்ந்தவர் சங்கர், 36; தனியார் நிதி நிறுவன மேலாளர். இவரது மனைவி பிரியங்கா, 31; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். ஆன்லைன் டிரேடிங் செயலியில், 50 லட்சம் ரூபாய் செலுத்தி வியாபாரம் செய்து வந்தார். இதில், நஷ்டம் ஏற்பட்டதால் சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்தார்.
பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் காரை நிறுத்தி, விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து மனைவிக்கு மொபைல்போனிலும் தெரிவித்துள்ளார். கணவரை மீட்ட மனைவி, வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே சங்கர் இறந்து விட்டார். பள்ளிக்கொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.