/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுாரில் பைனான்சியர் வெட்டி கொலை
/
வேலுாரில் பைனான்சியர் வெட்டி கொலை
ADDED : ஜன 25, 2025 02:04 AM
வேலுார்:வேலுாரைச் சேர்ந்தவர் பைனான்சியர் செல்வகுமார், 38. இவர், நேற்று காலை, சேண்பாக்கம், ராகவேந்திரர் கோவில் அருகே, டி.வி.எஸ்., ஸ்கூட்டி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் கும்பல், பின் தொடர்ந்தது.
இதை அறிந்த செல்வகுமார், அவர்களிடமிருந்து தப்பிக்க ஸ்கூட்டியை வேகமாக ஓட்டினார். அப்போது அந்த கும்பல் ஸ்கூட்டியை வழிமறித்து, செல்வகுமார் கழுத்தை வெட்டினர். செல்வகுமார் தப்பி ஓடியபோது, விடாமல் துரத்தி சென்று, வெட்டி கொலை செய்து பைக்கில் தப்பி சென்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வேலுார் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

