/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மென்பொறியாளரை மிரட்டி ரூ.27.46 லட்சம் மோசடி
/
மென்பொறியாளரை மிரட்டி ரூ.27.46 லட்சம் மோசடி
ADDED : பிப் 16, 2024 01:50 AM
வேலுார்:சென்னையை அருகே மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜசேகர், 26. இவர், சில நாட்களுக்கு முன், வேலுாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது, அவரது மொபைல் போனில் அழைத்த நபர், பிரபல கூரியர் நிறுவனத்தின் மும்பை கிளை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின் அவர், 'உங்களது பெயரில் ஒரு கூரியர் பார்சல் வந்துள்ளது.
அதில், சட்டவிரோத போதைப் பொருட்கள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஏராளமாக உள்ளன.
இது குறித்து, மும்பை போலீசார் விசாரிக்கின்றனர்' என்றார்.
மேலும் அவர், ராஜசேகருக்கு, ஸ்கைப் இணையதளம் ஒன்றின் லிங்கையும் அனுப்பி, அதில் இணைய கூறி உள்ளார். அப்போது, அந்த ஐ.டி.,யில் பேசிய மர்ம நபர், தன்னை மும்பை நகர போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தினார்.
அவர், 'நீங்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. உங்கள் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்' என, பயமுறுத்தும் வகையில் பேசி, ராஜசேகரின் வங்கி விபரங்களை பெற்றார்.
பின், ராஜசேகர் வங்கி கணக்கிலிருந்து, 27.46 லட்சம் ரூபாய், ஒரே நாளில் பல தவணைகளாக எடுக்கப்பட்டது.
தாமதமாக அதை அறிந்த ராஜசேகர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொடுத்த புகாரின்படி, வேலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.