/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'சிக்கன் பிரைடு ரைஸ்' சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
/
'சிக்கன் பிரைடு ரைஸ்' சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
'சிக்கன் பிரைடு ரைஸ்' சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
'சிக்கன் பிரைடு ரைஸ்' சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
ADDED : நவ 19, 2025 06:27 AM
ப.வேலுார்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம், ராஜேந்திரபட்டினத்தை சேர்ந்தவர் அஞ்சம்மாள், 50; இவருக்கு 8 குழந்தைகள். இதில், விஜயலட்சுமி, 9, விஜய், 5, வினிதா, 4, ஆகிய, மூன்று குழந்தைகளுடன், நாமக்கல், ப.வேலுார் அருகே, நெட்டையாம்பாளையம் கிராமத்தில் தங்கி, கரும்பு ஆலையில் வேலை செய்து வந்தார். மற்ற குழந்தைகள், அஞ்சம்மாளின் தாய் வீட்டில் வசிக்கின்றனர்.
அஞ்சம்மாளுடன் பணிபுரியும் ரமேஷ், நேற்று பாண்டமங்கலத்தில் உள்ள 'பாஸ்ட் புட்' கடையில், விஜயலட்சுமி, விஜய், வினிதா ஆகிய மூவருக்கும் சிக்கன் பிரைடு ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். மூவரும் அதை சாப்பிட்ட நிலையில், இரவு, 9:00 மணிக்கு, விஜயலட்சுமி திடீரென மயக்கமடைந்தார். மற்ற இருவருக்கும் பிரச்னை இல்லை.
அஞ்சம்மாள், ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்ற நிலையில் விஜயலட்சுமி உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர். 'பாஸ்ட் புட்' கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவு மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினர். மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டு, கடையை மூடினர்.

