/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வக்ப் சொத்து என கூறி நோட்டீஸ் கலெக்டரிடம் ஹிந்துக்கள் புகார்
/
வக்ப் சொத்து என கூறி நோட்டீஸ் கலெக்டரிடம் ஹிந்துக்கள் புகார்
வக்ப் சொத்து என கூறி நோட்டீஸ் கலெக்டரிடம் ஹிந்துக்கள் புகார்
வக்ப் சொத்து என கூறி நோட்டீஸ் கலெக்டரிடம் ஹிந்துக்கள் புகார்
ADDED : ஏப் 13, 2025 03:41 AM
அணைக்கட்டு: வேலுார் அருகே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 150க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வசித்து வரும் வீடுகள், வக்ப் வாரிய சொத்து எனக்கூறி, காலி செய்ய கூறியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து கலெக்டரிடம் மனு அளித்து, பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர்.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த, 150 ஹிந்து குடும்பத்தினர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் வீடுகள், அப்பகுதியிலுள்ள சையத் அலி சுல்தான் ஷா தர்காவின், வக்ப் வாரிய சொத்து என கூறி, காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும், தர்கா நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி ஹிந்துக்கள், தங்கள் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி, ஹிந்து முன்னணி வேலுார் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில், கலெக்டர் சுப்புலெட்சுமியை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.