ADDED : பிப் 05, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அணைக்கட்டு: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லுார் பஞ்சாயத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்படுகிறது.
இதில், ஒரு பிரிவினருக்கு ஒதுக்கிய வீடுகளை மற்றொரு பிரிவினருக்கு மாற்றி தந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அணைக்கட்டு தாசில்தார்கள் அடங்கிய குழுவினர், நேற்று நேரில் விசாரித்தனர்.
பஞ்., தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மக்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. இதில், முறைகேடு உறுதி செய்யப்பட்டது.
'இதுகுறித்த அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

