/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'100'ஐ அழைத்த மனைவி சாவை தழுவிய கணவன்
/
'100'ஐ அழைத்த மனைவி சாவை தழுவிய கணவன்
ADDED : மார் 28, 2025 01:46 AM
பாகாயம்:வேலுார் அருகே மனைவி, மகனை தாக்கிய கட்டட மேஸ்திரி, மனைவி, 100க்கு போன் செய்ததால், போலீஸ் விசாரணைக்கு பயந்து, தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார், தொரப்பாடியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி முருகேசன், 49. இவருக்கு மனைவி, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், 9 வயது மகனை அடித்துள்ளார். இதைக் கண்டித்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அன்றிரவு, 11:00 மணிக்கு கண் விழித்தவர், ஆத்திரம் தீராமல் மகன் மற்றும் மனைவியை தாக்கியுள்ளார்.
இதனால் முருகேசனின் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே ஓடி வந்து, போலீஸ் அவசர எண், 100க்கு போன் செய்தார். இதைப் பார்த்த முருகேசன், போலீஸ் விசாரணைக்கு பயந்து, வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், ஜன்னல் வழியாக மனைவி மற்றும் குழந்தைகள் பார்த்தபோது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.