/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வியாபாரியிடம் ரூ.5 லட்சம் பறித்தவர் கைது
/
வியாபாரியிடம் ரூ.5 லட்சம் பறித்தவர் கைது
ADDED : ஏப் 15, 2025 06:29 AM
வேலுார்: துாத்துக்குடியை சேர்ந்தவர் செல்வகுமார், 39; திருப்பதியில் பால்-கோவா கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு துாத்-துக்குடிக்கு அரசு பஸ்சில் பயணித்தார். கைப்பையில், 5 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். வேலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்ததும், வாலிபர் ஒருவர் ஏறினார். செல்வ குமார் பணம் வைத்துள்ளதை அறிந்து, 'எனக்கு பணம் தேவைப்படுகிறது. நான் உங்களுக்கு யு.பி.ஐ., மூலம் பணம் அனுப்பு கிறேன். எனக்கு பணமாக கொடுங்கள்' என கேட்டுள்ளார்.
அப்போது செல்வகுமார் பஸ்சிலிருந்து இறங்கி, அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். இதை கவனித்த வாலிபர், செல்வகுமாரின் பையை பறித்து கொண்டு ஓடிவிட்டார். செல்வகுமார் புகாரின்படி வேலுார் வடக்கு போலீசார் விசாரித்-தனர். பணத்தை பறித்து சென்ற தேனி மாவட்டம் போடிநாயக்-கனுார், விஸ்வாசபுரத்தை சேர்ந்த கதிர்வேல், 28, என்பவரை கைது செய்தனர்.