/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கிணற்றில் தத்தளித்த மா.திறனாளி 11 மணி நேரத்துக்கு பின் மீட்பு
/
கிணற்றில் தத்தளித்த மா.திறனாளி 11 மணி நேரத்துக்கு பின் மீட்பு
கிணற்றில் தத்தளித்த மா.திறனாளி 11 மணி நேரத்துக்கு பின் மீட்பு
கிணற்றில் தத்தளித்த மா.திறனாளி 11 மணி நேரத்துக்கு பின் மீட்பு
ADDED : மே 29, 2025 01:57 AM
குடியாத்தம், குடியாத்தம் அருகே, மது போதையில், 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த மாற்றுத்திறனாளியை, 11 மணி நேரத்துக்கு பின், தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி சானாங்குட்டையை சேர்ந்தவர் இளங்கோ, 35. மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், பக்கத்து கிராமமான நலங்காநல்லுார் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, மது போதையில் அப்பகுதியிலுள்ள விவசாய நிலம் வழியாக நடந்து சென்றவர், கிருஷ்ணன் என்பவரின் விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். இடது கை இழந்த மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் நீந்த முடியாமல், கிணற்றின் கரையை பிடித்தவாறு, இரவெல்லாமல் தவித்து, 'யாராவது காப்பாற்றுங்கள்' என கத்தியவாறு இருந்தார்.
நேற்று காலை, 7:00 மணியளவில் அந்த வழியாக வந்தவர்கள் கிணற்றை பார்த்தபோது, இளங்கோ தவித்து கொண்டிருந்ததை கண்டனர். பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினர் நேற்று காலை, 8:00 மணிக்கு வந்து, அவரை பத்திரமாக மீட்டனர். பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.