/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுார் பொற்கோவிலில் அமைச்சர் யாகம்
/
வேலுார் பொற்கோவிலில் அமைச்சர் யாகம்
ADDED : அக் 26, 2025 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் பொற்கோவிலில் அமைச்சர் யாகம்
வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா சண்டி ஹோமம் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் சக்தி அம்மா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். ஸ்ரீபுரம் பொற்கோவிலில் நாராயணி அம்மனை தரிசித்த சிவராஜ் சிங் சவுகான், அவரது மனைவி சாதனா சிங் ஆகியோர் கோவிலை சுற்றி பார்த்தனர்.
பின்னர், கோவில் வளாகத்தில் நடந்த மகா சண்டி யாகம் பூர்ணாஹுதியில் பங்கேற்றனர். குருஸ்தானம் பூஜை மண்டபத்தை திறந்து வைத்து, அமைச்சர் மரக்கன்றுகளை நட்டார்.

