/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தமிழகத்தில் 'பி.எம்., கிசான்' சம்மான் நிதி ஏராளமான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை தமிழக அரசு பட்டியல் அனுப்ப சவுகான் வேண்டுகோள்

ADDED : அக் 26, 2025 01:45 AM

விரிஞ்சிபுரம்: “தமிழகத்தில் பி.எம்., கிசான் சம்மான் நிதி ஏராளமான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை,” என, மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில், தமிழக வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில், பி.எம்., கிசான் சம்மான் நிதி பல விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என தகவல் வந்துள்ளது. தமிழக அரசு, தகுதியான விவசாயிகள் விபரங்களை ஆதார் அடிப்படையில் தகவல்களை திரட்டி , மத்திய அரசுக்கு அனுப்பினால், இந்த திட்டத்தின் கீழ் நிதி கிடைக்க ஏற்பாடு செய்வோம். இதற்காக தமிழக முதல்வருக்கு நான் கடிதம் எழுதுவேன்.
விவசாயிகள் பட்டியலை அனுப்பினால், அவர்களின் வங்கி கணக்கிகல் பணம் வரவு வைக்கப்படும். மத்திய அரசு, மேலும் இரண்டு திட்டங்களை நாடு முழுதும் செயல்படுத்துகிறது. முதல் திட்டம், பருப்பு வகைகளை உற்பத்தி செய்வது. இரண்டாவது, இந்தியாவில் விவசாய உற்பத்தியில் பின்தங்கிய சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அங்கு உற்பத்தியை பெருக்குவது.
தமிழகத்தில் முதல்கட்டமாக, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங் கை, ராமநநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் அளித்த பேட்டியில், “மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் அதிகமான அளவில் நெல் கொள்முதல் செய்துள்ளது.
''விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு சரியான விலை பெறுவதற்காக குறைந்தபட்ச நெல் ஆதரவு விலையை உயர்த்தி உள்ளோம்,” என்றார்.