/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுார் மத்திய சிறையில் கைதி பதுக்கிய மொபைல்போன் பறிமுதல்
/
வேலுார் மத்திய சிறையில் கைதி பதுக்கிய மொபைல்போன் பறிமுதல்
வேலுார் மத்திய சிறையில் கைதி பதுக்கிய மொபைல்போன் பறிமுதல்
வேலுார் மத்திய சிறையில் கைதி பதுக்கிய மொபைல்போன் பறிமுதல்
ADDED : ஜன 31, 2025 02:42 AM
வேலுார்:வேலுார் மத்திய சிறையில், கைதி பதுக்கி வைத்த மொபைல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலுார் மத்திய சிறையில், 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு மொபைல்போன், கஞ்சா நடமாட்டத்தை தடுக்க, தீவிர கண்காணிப்பும், ஆய்வும் நடத்தப்படுகிறது.
கடந்த, 27 ம் தேதி சிறையின், 5வது பிளாக் அருகே சிறைத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள மரத்தடியில் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டிருந்த நிலையில் ஒரு பொருள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. சந்தேகமடைந்து பிளாஸ்டிக் கவரை பிரித்து பார்த்தபோது, அதில் மொபைல்போன் இருந்தது.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியை சேர்ந்த பாண்டியன், 34, என்ற கைதி மறைத்து வைத்து, அவ்வப்போது மொபைல்போனை பயன்படுத்தியது தெரியவந்தது.
இவர், கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைதாகி, கடந்த, 2023 முதல் விசாரணை கைதியாக வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து, பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து, சிறைக்குள் மொபைல்போன் வந்தது எப்படி, அதன் மூலம் அவர், யார் யாரிடம் தொடர்பு கொண்டு பேசினார் என, விசாரித்து வருகின்றனர்.

