/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
5வது மாடியிலிருந்து குதித்து 2 குழந்தையின் தாய் தற்கொலை
/
5வது மாடியிலிருந்து குதித்து 2 குழந்தையின் தாய் தற்கொலை
5வது மாடியிலிருந்து குதித்து 2 குழந்தையின் தாய் தற்கொலை
5வது மாடியிலிருந்து குதித்து 2 குழந்தையின் தாய் தற்கொலை
ADDED : அக் 02, 2024 01:53 AM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28. பெங்களூரில் மெக்கானிக்காக பணியாற்றுகிறார். இவர் மனைவி சுரேகா, 23. நிறைமாத கர்ப்பிணியான அவர் செப்., 23ல் பிரசவத்திற்காக, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு அவருக்கு, இரு பெண் குழந்தைகள் பிறந்தன.
ஒரு குழந்தை எடை குறைவாக இருந்ததால், இரு குழந்தைகளையும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர். ஒரு குழந்தையை, இரு நாட்களுக்கு முன் தாய் சுரேகாவிடம் கொடுத்தனர். மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குழந்தையைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்த சுரேகா, தற்கொலை செய்யும் நோக்கில், நேற்று முன்தினம் மாலை பிரசவ வார்டு உள்ள, ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து படுகாயங்களுடன் மயங்கினார். அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.