/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கள்ளக்காதலன் கொலை; மகனுடன் தாய் கைது
/
கள்ளக்காதலன் கொலை; மகனுடன் தாய் கைது
ADDED : மே 12, 2025 11:42 PM
வேலுார் : கள்ளக்காதலனை மகனுடன் சேர்ந்து இரும்பு ராடால் அடித்துக் கொன்ற பெண் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.
வேலுார் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 32; விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயா, 45; கணவனை இழந்தவர். இவருக்கு இந்துக்குமார், 22, என்ற மகன் உள்ளார்.
அய்யப்பனுக்கும், ஜெயாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவ்வப்போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். இதை ஜெயாவின் மகன் இந்துக்குமார் கண்டித்து வந்தார். 10ம் தேதி இரவு, அய்யப்பனும், ஜெயாவும் உல்லாசமாக இருந்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், தாய், மகன் இருவரும் சேர்ந்து, அய்யப்பனை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்து, தலைமறைவாகினர்.
திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு, தாய், மகனை கைது செய்தனர்.