நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் அடுத்த, ஓட்டேரியில் பாலமதி கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில், நேற்று முன்தினம் மாலை, ஒரு பெண்சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்படி, வி.ஏ.ஓ., உதவியாளர் தேவராஜ், பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடந்ததும், அவர் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.