/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
நெல்லை - வேலுார் சென்ற பார்சல் லாரி எரிந்து நாசம்
/
நெல்லை - வேலுார் சென்ற பார்சல் லாரி எரிந்து நாசம்
ADDED : டிச 10, 2024 07:13 AM

வேலுார் : வேலுார் அருகே, பார்சல் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.
திருநெல்வேலியிலிருந்து வேலுாருக்கு, பார்சல் ஏற்றிய மேட்டூர் பார்சல் சர்வீஸ் என்ற நிறுவனத்தின் கன்டெய்னர் லாரி, நேற்று மாலை 3:30 மணிக்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.
வேலுார் அடுத்த கருகம்புத்துார் அருகே, லாரி இன்ஜினில் தீப்பிடித்தது. இதையறிந்த டிரைவர் ராமகிருஷ்ணன், 40, லாரியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு இறங்கி தப்பினார்.
வேலுார் தீயணைப்பு துறையினர் மற்றும் வேலுார் வடக்கு போலீசார், விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடம் சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இருப்பினும் கன்டெய்னர் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.